தமிழகத்தில் 779 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

0 844
தமிழகத்தில் 779 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தமிழகத்தில் உள்ள 779 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தமிழகத்தில் உள்ள 14144 சாதாரண ஏரிகளில், 779 ஏரிகள் 100 சதவீத முழு கொள்ளளவை எட்டியுள்ளன என்றார்.

இதேபோல்  9521 பாசன ஏரிகளில் 714 ஏரிகள் 100 சதவீத முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக அவர் கூறினார். செம்பரம்பாக்கம் ஏரி இன்னும் நிரம்பவில்லை என்றும், செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும்போது அடையாறு ஆற்றில் குறைந்தளவு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

பேரிடர் காலத்தில் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  சமூக வலைதளங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments