தேர்தல் அறிவித்தால் கொடுப்பதும், வாங்குவதும் தெரியக்கூடாது - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

0 2543
தேர்தல் அறிவித்தால் கொடுப்பதும், வாங்குவதும் தெரியக்கூடாது - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

தேர்தலில் ஜெயிக்கிற வித்தை அதிமுகவுக்கு தெரியும் என்று கூறியுள்ள அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தேர்தல் அறிவித்தால் கொடுப்பதும் தெரியக்கூடாது வாங்குவதும் தெரியக்கூடாது என்று கட்சியினருக்கு அறிவுரை கூறினார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக கூட்டம் போட்டாலே அனைவருக்கும் மட்டன் சாப்பாடுதான், கிடா வெட்டுதான் என்றார்.

அனைவருக்கும் சாப்பாடு போட்டு அரசியல் பண்ணும் இயக்கம் அதிமுக என்று கூறிய  ராஜேந்திரபாலாஜி, திமுகவை ஒரு பிடி பிடித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments