எஸ்.ஏ.சி. தொடங்கிய அ.இ.த.வி.ம.இ. கட்சி தலைவர் ஆர்.கே.ராஜா எனும் பத்மநாபன் ராஜினாமா

0 2276
எஸ்.ஏ.சி. தொடங்கிய அ.இ.த.வி.ம.இ. கட்சி தலைவர் ஆர்.கே.ராஜா எனும் பத்மநாபன் ராஜினாமா

எஸ் ஏ சந்திரசேகர் தொடங்கிய அஇதவிமஇ கட்சியின் தலைவர்  பதவியிலிருந்து R. K. ராஜா என்கிற பத்மநாபன் ராஜினாமா செய்துள்ளார்.

ரியல் எஸ்டேட்  தொழில் தொடர்பாக, மண்ணச்சநல்லூரை  சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்திருந்தனர். ஆர்.கே.ராஜாவின் மைத்துனர், மனைவி மற்றும் மாமனாரையும் அண்மையில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் அழைத்து சென்று  விசாரணை நடத்தினர்.

நடிகர் விஜய்க்கு நெருக்காமனவராகக் கருதப்படும் புஸ்ஸி ஆனந்த் தரப்பு கொடுத்த அழுத்தம் காரணமாகவே போலீசார் தன்னைத் தேடுவதாகவும், தனது  உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு புஸ்ஸி ஆனந்த் தான் முழுப்பொறுப்பும் என ராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தனது தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ராஜினாமா கடிதத்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அனுப்பி வைத்துள்ளார். முன்னதாக கட்சியின் பொருளாளராக இருந்த ஷோபாவும் ராஜினாமா செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments