டிசம்பர் முதல் வாரத்திற்குள் மெரினா கடற்கரையை திறப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

0 2141
டிசம்பர் முதல் வாரத்திற்குள் மெரினா கடற்கரையை திறப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பது தொடர்பாக டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிவெடுக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் மீன் அங்காடிகளை முறைப்படுத்துவது, கடற்கரையை தூய்மைப்படுத்துவது தொடர்பான உத்தரவுகளை அமல்படுத்துவது குறித்த வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ். ரமேஷ்  அமர்வில் விசாரணையில் உள்ளன.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மெரினா கடற்கரையை திறக்க சென்னை மாநகராட்சி சார்பில் பரிந்துரை செய்யபட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டிசம்பர் முதல் வாரத்திற்குள் மெரினாவை திறப்பது தொடர்பாக முடிவெடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் தலையிட நேரிடும் என்று தெரிவித்த நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments