இந்தியாவில் முன்னணி களப்பணியாளர்கள், முதியோர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பு மருந்து கொடுக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு வருவதாக தகவல்

0 824
இந்தியாவில் முன்னணி களப்பணியாளர்கள், முதியோர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பு மருந்து கொடுக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு வருவதாக தகவல்

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து முதன்முதலில் முன்னணி களப்பணியாளர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு கொடுக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் பிற நாடுகளை போல இந்தியாவிலும் கொரோனா மருந்து கண்டுபிடிக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. அந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும், அதை மக்களுக்கு எவ்வாறு கொடுப்பது என்பது குறித்த திட்டத்தை மருத்துவர் வி.கே. பால் தலைமையிலான தடுப்பு மருந்து நிர்வாக தேசிய நிபுணர் குழு வகுத்து வருகிறது.

அதுகுறித்து கூறிய மூத்த மத்திய அரசு அதிகாரி ஒருவர், நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் மொத்தமாக கொடுக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments