சென்னையில் கஞ்சா வியாபாரம்...பெண்ணை பட்டா கத்தியால் வெட்டிய கும்பல்

0 1230
சென்னையில் கஞ்சா வியாபாரம்...பெண்ணை பட்டா கத்தியால் வெட்டிய கும்பல்

சென்னையில் கஞ்சா விற்பனையை தடுக்க முயன்ற பெண் உரிமை செயற்பாட்டாளர் மீது பட்டாக் கத்தியால் தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. 

சென்னை தலைமைச் செயலகம் அருகே போர் நினைவுச் சின்னத்திற்கு எதிரே அமைந்துள்ள குடியிருப்பு பகுதி அன்னை சத்யா நகர். இங்கு கஞ்சா புழங்குவது நீண்ட காலமாக புகாராக இருந்து வந்தாலும், காவல் துறை ஏன் நிரந்தர நடவடிக்கை எடுக்கவில்லை என்பது புரியாத புதிராகவே நீடித்து வருகிறது. சமீபத்தில் கூட இந்த பகுதியில் கஞ்சா விற்பனையைக் கண்காணிக்க பணியமர்த்தப்பட்ட ஆயுதப்படை காவலர் ஒருவரே, கஞ்சா வியாபாரியாக மாறிய பின் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அன்னை சத்யா நகர் பகுதியில் பெண்ணுரிமை இயக்கத்தைச் சேர்ந்த அன்னக்கிளி என்பவர் கஞ்சா விற்பனை செய்த சில இளைஞர்களை தட்டிக் கேட்டதால், கஞ்சா கும்பல் அவரை பட்டாக் கத்தி மூலம் தாக்கி தலை, கைகளில் கொடுங்காயத்தை ஏற்படுத்தி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காயமடைந்தவரின் சகோதரிகள் யசோதா மற்றும் கற்பகம் ஆகியோரையும் கஞ்சா கும்பல் தாக்கியுள்ளது. கஞ்சா போதையில் தாக்குதல் நடத்திய சங்கர், சுந்தரம் மற்றும் தேவா ஆகிய மூன்று பேரையும் கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதே வேளையில், அன்னக்கிளி அந்த பகுதியில் கஞ்சா விற்பவர்களுக்கு எதிரான நடவடிக்கையை தங்களது இயக்கத்தின் மூலம் மேற்கொண்டு வந்ததால், அவர் மீதான முன் விரோதத்தில் கடந்த ஜூலை மாதம், அன்னகிளியின் உறவினரான 20 வயது இளம்பெண் வீட்டில் குளிக்கும் போது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அன்னக்கிளி சென்னை கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காததால் தற்போது தாக்குதல் வரை சென்றிருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தலைமைச் செயலகம் அருகிலேயே நடைபெறும் கஞ்சா புழக்கத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments