கில்ஜித்-பல்திஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் இம்ரான் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி

0 1434
கில்ஜித்-பல்திஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் இம்ரான் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி

கில்ஜித்- பல்திஸ்தான் சட்டமன்றத் தேர்தல்களில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெரீக் இன்சாப் கட்சி 10 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் அக்கட்சி கள்ள ஓட்டுகள் போட்டு வென்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. பிலாவால் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு 3 இடங்களும் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சிக்கு இரண்டு இடங்களும் கிடைத்துள்ளன.

மஜ்லீஸ் கட்சி ஓரிடத்தில் வென்றது. ஏழு இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளன. கில்ஜித் 2 தொகுதியில் போட்டியிட்ட இம்ரான்கான் கட்சியின் பத்தேவுல்லா கான் இரண்டு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments