பெல்காம் - மைசூர் விமானம், சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம் : 52 பேர் உயிர் தப்பினர்

0 7684

ர்நாடக மாநிலம் பெல்காமிலிருந்து மைசூர் செல்ல வேண்டிய தனியார் பயணிகள் விமானம், திடீர் இயந்திரக்கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு அவசரமாக தரையிறங்கியது.

ட்ரூஜெட் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க தயாரான போது, இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் துரிதமாக செய்யப்பட்டன.

பின்பு விமானம் பத்திரமாக தரையிறங்கியது. எனினும் விமானம் பழுதடைந்து ஓடுபாதையில் நின்று விட்டதால், அந்த ஓடுபாதையில் அதற்கு பின்பு வந்த விமானங்கள் தரையிறங்க முடியவில்லை.

இதையடுத்து இரண்டாவது ஓடுபாதையை பயன்படுத்தி விமான சேவைகள் நடந்தன. விமானி சாமர்த்தியமாக செயல்பட்டதால் பயணிகள் உள்பட 52 பேர் உயிர் தப்பினர். இந்தசம்பவம் பற்றி டிஜிசிஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments