பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மீது ஒழுங்கமைப்பு ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடி

0 977

யங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தி உள்ளார்.

ரஷ்யா தலைமையிலான 12வது பிரிக்ஸ் கூட்டமைப்பு மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பேசிய அவர், உலகம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய பிரச்சனையாக பயங்கரவாதம் தற்போது உள்ளது என்றார்.

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை இதற்கு பொறுப்பேற்க செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பிரிக்ஸ் அமைப்பு தொடங்கி 2021 ஆம் ஆண்டுடன் 15 ஆண்டுகள் நிறைவடைய இருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியா தலைமையில் நடைபெற இருக்கும் அடுத்த மாநாட்டில், கடந்த மாநாடுகளில் எடுத்த  முடிவுகளை மதிப்பீடு செய்து அறிக்கை வெளியிடலாம் என்றார்.

லடாக் எல்லை பிரச்சனை நீடித்து வரும் நிலையில் சீனா அதிபர் ஜின்பிங்கும் இந்த மாநாட்டில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments