திருவண்ணாமலை கோவிலில் ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்கள் இன்று முதல் தரிசனத்திற்கு அனுமதி

திருவண்ணாமலை கோவிலில் ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்கள் இன்று முதல் தரிசனத்திற்கு அனுமதி
திருவண்ணாமலை கோவிலில் ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்கள் இன்று முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் 3-ந் தேதி வரை ஒருநாளைக்கு சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் http://www.arunachaleswarartemple.tnhrce.in/ என்ற கோவில் இணையதளத்தில் ஒரு நபருக்கு ஒரு நுழைவு சீட்டு என்ற முறையில் கட்டணமில்லாமல் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கோவில் நிர்வாகம் நிபந்தனை விதித்து உள்ளது.
முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கோவிலுக்குள் நுழையும்போது ஆதார் அட்டை நகல் அவசியம் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments