சபரிமலையில் தனிமனித இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி...நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

சபரிமலையில் தனிமனித இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி...நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தனி மனித இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்த கோவிலில் மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பக்தர்கள் கடும் கட்டுப்பாடுகளுடன் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேர் வீதம் அனுமதிக்கப்படுகின்றனர்.
முன்பதிவு செய்த போது ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். தனி மனித இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Comments