நடிகர் சூரியிடம் ரூ.2.70 கோடி நிலமோசடி எனப் புகார்...சிறுசேரி ஊராட்சி தலைவர், சகோதரரிடம் போலீசார் விசாரணை

0 2844
நடிகர் சூரியிடம் ரூ.2.70 கோடி நிலமோசடி எனப் புகார்...சிறுசேரி ஊராட்சி தலைவர், சகோதரரிடம் போலீசார் விசாரணை

நடிகர் சூரியின் நிலமோசடி புகார் தொடர்பாக, சென்னையை அடுத்த சிறுசேரி ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அவரது சகோதரரிடம், அடையாறு குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சிறுசேரியில் நிலம் வாங்கி தருவதாக 2 கோடியே 70 லட்ச ரூபாய் அளவிற்கு சூரியிடம் மோசடி செய்ததாக முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா, படத்தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நடிகர் சூரியிடம் ஏமாற்றி விற்கப்பட்டதாக குறிப்பிடப்படும் இடத்தை, வீட்டு மனைக்கான நிலம் என சான்றிதழ் அளித்த சிறுசேரி ஊராட்சி மன்ற தலைவர் ஏகாம்பரம், அவரது சகோதரர் வெங்கடேசனிடமும், அடையாறு குற்றப்பிரிவு போலீசார், 2 நாட்களாக விசாரணை நடத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments