நடிகர் தவசிக்கு விஜய் சேதுபதி ரூ.1 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ.25,000 நிதியுதவி...

0 4573
நடிகர் தவசிக்கு விஜய் சேதுபதி ரூ.1 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ.25,000 நிதியுதவி..

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசியின் சிகிச்சைக்கு உதவும் வகையில் நடிகர் விஜய் சேதுபதி 1 லட்ச ரூபாயும், சிவகார்த்திகேயன் 25 ஆயிரம் ரூபாயும் வழங்கியுள்ளனர்.

சிகிச்சைக்கு பணமில்லாமல் கஷ்டபடுவதால் உதவி கோரி அவர் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தவசிக்கு விஜய் சேதுபதி 1 லட்சம் ரூபாயும், சிவகார்த்திகேயன் 25 ஆயிரம் ரூபாயும், நடிகர் சூரி முதல்கட்டமாக 20 ஆயிரம் ரூபாயும் வழங்கியுள்ளனர்.

தவசி சிகிச்சை பெறும் மருத்துவமனை உரிமையாளரான சரவணன் எம்எல்ஏ, மருத்துவ செலவுகள் அனைத்தையும் தங்களது சூர்யா தொண்டு நிறுவனம் ஏற்பதாக குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments