தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதியில் நிலவும் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், அடுத்த 48 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
இதேபோல் சென்னை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 17 சென்டிமீட்டர் மழை பெய்திருப்பதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
Comments