அமெரிக்காவில் 101 மாடி கட்டடத்தில் ஜன்னல் சுத்தம் செய்தபோது கீழே விழுந்த பணியாளர்கள் படுகாயங்களுடன் மீட்பு

அமெரிக்காவில் 101 மாடி கட்டடத்தில் ஜன்னல் சுத்தம் செய்தபோது கீழே விழுந்த பணியாளர்கள் படுகாயங்களுடன் மீட்பு
அமெரிக்காவில் 101 அடுக்குகள் கொண்ட கட்டடத்தில் இருந்து கீழே விழுந்த இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மன்ஹாட்டன் நகரில் ஹட்சன் யார்ட்ஸ் என்ற 101 மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு கண்ணாடிகளைச் சுத்தம் செய்யும் பணியில் இரு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவர்கள் அமர்ந்திருந்த சாரம் அறுந்து விழுந்ததால் இருவரும் கட்டடத்தின் உச்சியிலிருந்து விழுந்தனர். இதில் ஒருவர் 13 மாடிகள் கழிந்து 88 மாடியிலும், மற்றொருவர் 35வது மாடியிலும் இருந்த தடுப்பிலும் விழுந்து படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த தீயணைப்புப் படையினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
Comments