இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் இறுதிகட்ட பரிசோதனை தொடக்கம்

0 1670
இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் இறுதிகட்ட பரிசோதனை தொடக்கம்

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான கோவாக்சினின் 3 ஆம் கட்ட சோதனை துவங்கி உள்ளது.

ஐசிஎம்ஆர் உடன் சேர்ந்து 26 ஆயிரம் தன்னார்வலர்களிடம் இந்த சோதனை நடத்தப்படுகிறது. இந்த தடுப்பூசி முழுக்க முழுக்க இந்தியாவின் தயாரிப்பாகும்.

இதனிடையே தனது தடுப்பூசியான mRNA  94.5 சதவிகிதம் பலன் தரக்கூடியது என அமெரிக்க நிறுவனமான மாடர்னா தெரிவித்துள்ளது. பிரிட்ஜில் வைத்தால் 30 நாட்கள் வரை இந்த தடுப்பூசி பலனளிக்க கூடியதாக இருக்கும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதே ரக தடுப்பூசியை ஃபைசர் நிறுவனம் உருவாக்கி உள்ளது. ஆனால் மைனஸ் 75 டிகிரியில் மட்டுமே அதை பயன்படுத்த முடியும் என்ற சிக்கல் உள்ளது.

ஜான்சன் &ஜான்சன் தனது தடுப்பூசியின் இரண்டு டோஸ் சோதனையை பல நாடுகளில் துவக்கி உள்ளது. முறையான உரிமங்கள் கிடைத்த பிறகு  இந்த நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியை  வாங்குவதற்கான பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்தி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments