ரஷ்யாவில் இன்று 12வது பிரிக்ஸ் மாநாடு : பிரதமர் மோடி காணொளி மூலம் பங்கேற்பு

0 562
ரஷ்யாவில் இன்று 12வது பிரிக்ஸ் மாநாடு : பிரதமர் மோடி காணொளி மூலம் பங்கேற்பு

ரஷ்யாவில் இன்று நடைபெறும் 12-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிபர் புதின் அழைப்பின் பேரில், காணொளி மூலம் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் மோடி பங்கேற்கிறார்.கொரோனா தொற்று, உலகளாவிய முக்கிய பிரச்சினைகள் போன்றவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

மாநாட்டில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. காணொளி முறையில் நடைபெறும் இந்த மாநாட்டில் சீனா சார்பில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments