தூத்துக்குடிக்கு சிவப்பு எச்சரிக்கை... நாளை காலை வரை அதி தீவிர கனமழைக்கு வாய்ப்பு

தூத்துக்குடிக்கு சிவப்பு எச்சரிக்கை... நாளை காலை வரை அதி தீவிர கனமழைக்கு வாய்ப்பு
செவ்வாய்கிழமை காலை வரை தூத்துக்குடி மாவட்டத்தில் அதி தீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென் தமிழகத்தின் கடலோரப் பகுதியில் அடர்த்தியான மேகக் கூட்டங்கள் திரண்டு இருப்பதால், தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய்கிழமை காலை 8.30 மணி வரை அதி தீவிர கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக நிர்வாக ரீதியிலான சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கள் காலை 8.30 மணி நிலவரப்படி தூத்துக்குடியில் 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
Comments