புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி வாழ்வாதாரத்திற்காக நிதி உதவி கோரி வேண்டுகோள்

0 7098
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி வாழ்வாதாரத்திற்காக நிதி உதவி கோரி வேன்டுகோள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் தவசி, தனது வாழ்வாதாரத்திற்காக நிதி உதவி கோரியிருக்கிறார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் தவசி. அவரது நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால்,நடிகர் தவசி அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் மெலிந்து விட்டார். இந்த இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வர தனக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன், தனது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் தவசிக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments