தமிழ்நாட்டில் இன்று 1725 பேருக்கு கொரோனா உறுதி

0 3215
தமிழ்நாட்டில் இன்று 1725 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, படிப்படியாக குறைந்து வருகிறது. புதிதாக ஆயிரத்து 725 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அரியலூர், ராமநாத புரம், சிவகங்கை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு, ஒற்றை இலக்கத்திற்கு குறைந்தது. பெரம்பலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட, கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.

தமிழகம் முழுவதும் ஒரே நாளில், 2 ஆயிரத்து 384 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள நிலையில், பெருந் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 17 பேர் உயிரிழந்தனர். சென்னையில், கணிசமாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், புதிதாக 497 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments