ராஜஸ்தான் மாநிலத்தில் அமைதிக்கான சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி...

0 1521
ராஜஸ்தான் மாநிலத்தில் அமைதிக்கான சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி...

ராஜஸ்தான் மாநிலத்தில் அமைதிக்கான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.

ஜைனத் துறவியான விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜ், எளிய வாழ்க்கையை வாழ்ந்து, மகாவீரரின் போதனைகளைப் பின்பற்றியவர். அவருடைய ஊக்குவிப்பால் கல்லூரிகள், பள்ளிகள், கல்வி மையங்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகின்றன.

ராஜஸ்தான் மாநிலம், பாலியில் அமைதிக்கான சிலை’ என்ற பெயரில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. 8 உலோகங்களைக் கொண்டு செய்யப்பட்ட சிலையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், சர்தார் வல்லபாய் படேலும், ஜைனாச்சார்யா விஜய் வல்லப் ஜியும் நாட்டிற்கு சேவை ஆற்ற வாழ்க்கையை அர்ப்பணித்தனர் என்றார். இரு தலைவர்களின் சிலைகளையும் திறப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது, தமது அதிர்ஷ்டம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments