ஸ்டெர்லைட் வழக்கு: ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது- தமிழக அரசு பதில்..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுப்புறப் பகுதிகளில் காற்றுமாசுபடுவதாகவும், இதனால் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 2018ஆம் ஆண்டு மே மாதத்தில் போராட்டத்தின்போது 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதையடுத்து ஆலை மூடி முத்திரையிடப்பட்டது. ஆலையைத் திறக்க அனுமதி கோரிய ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் மேல் முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கில் தமிழக அரசு அளித்துள்ள பதில் மனுவில் இடைக்காலமாக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேதாந்தா நிறுவனம் அனுமதி கோர எந்த முகாந்திரமும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை டிசம்பர் முதல் வாரத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Comments