செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு.. மக்கள் அச்சப்பட வேண்டாம்..!

0 4133
செம்பரம்பாக்கம் ஏரியில் உச்ச நீர்மட்டமான 24 அடியில் 20 புள்ளி 7 அடி உயரத்துக்கே தண்ணீர் உள்ளதாலும் நீர்வரத்து குறைவாக உள்ளதாலும் சென்னை மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரியில் உச்ச நீர்மட்டமான 24 அடியில் 20 புள்ளி 7 அடி உயரத்துக்கே தண்ணீர் உள்ளதாலும் நீர்வரத்து குறைவாக உள்ளதாலும் சென்னை மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூவிருந்தவல்லி அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரி சென்னை மாநகரின் முதன்மையான நீராதாரமாக உள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்ததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து நேற்று 1720 கன அடியாக இருந்தது. உச்ச நீர்மட்டமான 24 அடியில் 20 புள்ளி 7 அடிக்குத் தண்ணீர் நிரம்பியுள்ளது.

2015ஆம் ஆண்டு பெருமழையால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி உபரிநீர் அடையாற்றில் திறக்கப்பட்டதால் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது. அதைப்போல ஒரு சூழல் ஏற்பட்டுள்ளதாகச் சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டப் பொதுப்பணித்துறைக் கண்காணிப்புப் பொறியாளர் கண்ணையா செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிப் பகுதியில் 15 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

ஏரியில் 20 புள்ளி ஏழு ஐந்து அடிக்குத் தண்ணீர் உள்ளது. நீர்வரத்து 700 கன அடியாகக் குறைந்துள்ளது. நீர்மட்டம் 22 அடியை எட்டும்போதுதான் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்றும், நீர்வரத்து குறைவாக உள்ளதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள அம்மணம்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து, 200 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இந்த வீடுகளுக்குக் குடிநீர், சாலை, மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. பருவமழையால் அம்மணம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது.

இதனால் ஏரி முழுவதும் நிரம்புமுன்னே ஆக்கிரமிப்பாளர்கள் மதகை உடைத்து நீரை வெளியேற்றுகின்றனர். இது குறித்துத் தகவல் அறிந்தும், குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரி நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரை அடுத்துள்ள செந்தமிழ் நகரில் கனமழை காரணமாக ஏரி தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் காவனூர் ஏரி தண்ணீர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளது. கழிவு நீரும் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments