கார்த்திகை முதல் நாளில் மாலையணிந்த ஐயப்ப பக்தர்கள்..!

0 1611
கார்த்திகை முதல்நாளில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள கோவில்களுக்குச் சென்று மாலை அணிந்தனர்.

கார்த்திகை முதல்நாளில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள கோவில்களுக்குச் சென்று மாலை அணிந்தனர்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதத்தில் மாலையணிந்து ஒரு மண்டலக்காலம் நோன்பிருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். கார்த்திகை முதல் நாளான இன்று சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்தனர்.

 திருநெல்வேலி சந்திப்பு சாலைக் குமரசுவாமி கோவிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கார்த்திகை விரதத்தை தொடங்கினர். சபரிமலைக்குச் செல்வதற்குக் கேரள அரசால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மாலை அணியும் பக்தர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிடக் குறைவாகவே உள்ளது. 

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் கார்த்திகை முதல் நாளில் நடைபெற்ற பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபட்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சபரிமலைக்குச் செல்வதற்காக மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர்.

திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவில், சந்திப்பு வழிவிடு வேல்முருகன் கோவில், கன்டோன்மென்ட் ஐயப்பன் கோவில் ஆகியவற்றில் நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். கோவிலுக்கு வந்த ஐயப்ப பக்தர்களுக்கு உடல் வெப்பம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இராமநாதபுரம் அருகே உள்ள ரெகுநாதபுரம் ஐயப்பன் கோவிலில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கார்த்திகை விரதத்தை தொடங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments