எம்பிபிஎஸ் படிப்பிற்கான ரேங்க் பட்டியல் வெளியீடு..!

0 2446
MBBS ரேங்க் பட்டியல் - திருப்பூர் ஸ்ரீஜன் முதலிடம்

மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு முறையுடன், நாளை மறுநாள் கலந்தாய்வு தொடங்குகிறது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தில், மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். அதன்படி, ஈரோட்டில் படித்த, திருப்பூரை சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன், 710 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

நாமக்கல்லை சேர்ந்த மோகனபிரபா 705 மதிப்பெண்களுடன் இரண்டாமிடம் பிடித்துள்ளார். சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்த ஸ்வேதா 701 மதிப்பெண்களுடன் மூன்றாமிடம், விருதுநகரை சேர்ந்த யாழினி 695 இடங்களுடன் நான்காமிடத்தையும், தருமபுரியை சேர்ந்த அரவிந்த் 691 மதிப்பெண்களுடன் 5ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்த ஆண்டு, அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அடிப்படையில் எம்பிபிஎஸ் படிப்பில் 313 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 92 இடங்களும் என மொத்தம் 405 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு பிரிவுக்கும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேனியை சேர்ந்த ஜீவித்குமார், 664 மதிப்பெண்களுடன் முதலிடத்திலும், கள்ளக்குறிச்சியை சேர்ந்த அன்பரசன் 646 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்திலும், சென்னையை சேர்ந்த திவ்யதர்ஷினி 620 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

இந்த ஆண்டு சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என்றும், வரும் 18-ந் தேதி காலை, சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments