மத்திய அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கவே உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார் - எல். முருகன்

0 1968
மத்திய அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கவே உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார் - எல். முருகன்

மத்திய அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கவே  உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார் என்றும் அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பார் என்றும் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

வரும் 21ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார். 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், மத்திய அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கவே அமித்ஷா தமிழகம் வருகிறார் என்றும் அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்பார் என்றும் தெரிவித்தார்.

அமித்ஷாவின் வருகை தமிழகத்தில் பலருக்கு பயத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் எல்.முருகன் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments