ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குருபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள்

0 3262
ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குருபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள்

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குருபெயர்ச்சியை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு யாக பூஜைகள் தொடங்கியுள்ளன.

குரு பகவான் இன்று இரவு 9.47மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

இதையொட்டி குருபரிகார தலமான ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் ஆலயத்தில் நேற்று இரவு பரிகார சிறப்பு யாக பூஜைகள் தொடங்கின.

இதனிடையே, முதல்கால யாகபூஜையும், பின்னர் இன்று காலை 2ம் கால யாக பூஜையும் நடைபெற்றது. பிறகு குருபகவானுக்கு மஞ்சள், பால்,தயிர்,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன.

ஆன்லைனில் பதிவுசெய்யும் பக்தர்கள் மட்டுமே இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குருப்பெயர்ச்சி விழாவை you tube-ல் காணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments