ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் குரூ டிராகன் விண்கலத்தை நாளை விண்ணில் செலுத்த உள்ளது
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் குரூ டிராகன் விண்கலத்தை நாளை விண்ணில் செலுத்த உள்ளது
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் குரூ டிராகன் விண்கலம் விண்வெளி வீரர்கள் 4 பேருடன் இந்திய நேரப்படி நாளை காலை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் குரூ டிராகன் என்கிற விண்கலத்தைத் தயாரித்துள்ளது.
இந்த விண்கலம் மூலம் நாசா விண்வெளி வீரர்கள் 3 பேர், ஜப்பான் விண்வெளி வீரர் ஒருவர் என மொத்தம் 4 பேரைப் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு அனுப்ப உள்ளது.
அவர்கள் அங்கு 6 மாதம் வரை தங்கி ஆய்வு செய்ய உள்ளனர். புளோரிடாவில் உள்ள கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் இந்திய நேரப்படி நாளை காலை 5.57 மணிக்கு விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
முழுவதும் ஆட்களை ஏற்றிச் செல்லும் இந்த விண்கலம், இதுவரை அமெரிக்காவால் ஏவப்பட்டதில் மிகப்பெரியது என்பது குறிப்பிடத் தக்கது.
Comments