குடிபோதையில் வெடிகளைக் கொளுத்திப் போட்டவர்களை தட்டிக் கேட்ட கணவன்-மனைவி வெட்டிக் கொலை

0 14016
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் தம்பதியினர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மூவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் தம்பதியினர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மூவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சிட்டபுள்ளாம் பாளையத்தில் இளைஞர்கள் சிலர் சாலையில் சென்றோருக்கு இடையூறாகப் பிறந்தநாள் கொண்டாடிக் குடிபோதையில் வெடிகளைக் கொளுத்திப் போட்டுள்ளனர்.

தன் மகள் மீது வெடிகளை வீசியதை ராமசாமி என்பவர் தட்டிக்கேட்டார். இந்நிலையில் நேற்றுக் காலை ராமசாமியும் அவர் மனைவி அருக்காணியும் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சூர்யா, சாமிநாதன், கிருபாசங்கர் ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments