பெண்ணின் பெயருடன் HAL நிறுவனத்தில் உளவு பார்த்த ஐஎஸ்ஐ

0 1262

இந்தியாவின் இலகு ரக விமானத் தயாரிப்பு நிறுவனமான HAL நிறுவனத்தின் ரகசியங்களைதத் தெரிந்து கொள்ள பாகிஸ்தானின் உளவு அமைப்பு சமூக வலைதளங்களில் போலி கணக்கை தொடங்கியது தெரியவந்துள்ளது.

உளவு பார்த்த குற்றத்திற்காக கடந்த மாதம் HAL நிறுவன ஊழியர் தீபக் ஷிர்ஷாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, சமூக வலைதளத்தில் போலிக் கணக்கை உருவாக்கி அதன் மூலம் தீபக்கை வளைத்திருப்பதை கண்டறிந்ததாக மகாராஷ்டிரா தீவிரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதில் பெண் போல சாட்டிங் செய்தவர், தான் ஏரோநாட்டிக்ஸ் படிப்பதாகக் கூறி அது தொடர்பாக படங்கள் அனுப்புமாறு கேட்டதாகவும், அதற்கு தீபக் HAL நிறுவனத்தின் நடவடிக்கைகள் மற்றும் சுகோய் ஜெட் விமானங்களின் பாகங்களின் படங்களை அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments