பிரபல வங்காள மூத்த நடிகர் சௌமித்ரா சாட்டர்ஜி கவலைக்கிடம்

0 978

கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல வங்காள நடிகர் சௌமித்திர சாட்டர்ஜியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது குடும்பத்தினருக்கும் உடல் நல பாதிப்பு குறித்து மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏதேனும் ஒரு அதிசயம் நிகழ்ந்தாலொழிய அவரை மீட்க வாய்ப்பில்லை என்றும் அவர் திரும்பி வர முடியாத பயணத்தை மேற்கொண்டிருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சத்யஜித் ரே உள்ளிட்ட பல இயக்குனர்களின் படங்களில் நடித்தவர் சௌமித்திர சாட்டர்ஜி. 85 வயதான அவர் தாதா சாகேப் பால்கே உள்ளிட்ட பல உயரிய விருதுகளை  பெற்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments