பீகாரில் இன்று பிற்பகல் தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டம்-மீண்டும் நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பு

0 815
பீகாரின் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று பாட்னாவில் நடைபெறுகிறது.

பீகாரின் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று பாட்னாவில் நடைபெறுகிறது.

பீகாரின் 243 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளது.

இத்தேர்தலில் பாஜகவுக்கு 74 இடங்களும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 43 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இதர கூட்டணிக் கட்சிகளுக்கு 8 இடங்கள் கிடைத்தன. தனிப்பெரும் கட்சியாக 75 இடங்களை வென்ற தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலத்தைப் பெறவில்லை.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணிக்கு மொத்தம் 110 இடங்களில் வெற்றி கிடைத்தது. இந்நிலையில் புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்ய, நிதிஷ்குமார் தமது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அளித்தார். இன்று புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்வதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் பிற்பகல் 12.30 மணிக்கு கூடுகிறது.

இக்கூட்டத்தில் மீண்டும் நிதிஷ்குமார் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த தொகுதிகளில் வென்ற நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டாலும் பாஜகவை மீறி அவர் செயல்பட முடியாத நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments