திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று தொடங்குகிறது கந்த சஷ்டி திருவிழா

0 4823

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.

5ம் திருநாள் வரையிலும் மாலையில் தங்கத்தேரில் சுவாமி கிரிப்பிரகாரத்தில் வீதி உலா செல்வதற்கு பதிலாக, அம்பாள்களுடன் சப்பரத்தில் எழுந்தருளி, உள்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், வரும் 20ந்தேதி கடற்கரைக்கு பதிலாக, கோவில் கிரிபிரகாரத்தில் கிழக்கு பகுதியில் நடக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக சூரசம்ஹாரத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

7ம் திருநாளான 21ந்தேதி இரவில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments