திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவம் 4-ம் நாளான இன்று அம்பாள் அனுமந்த வாகனத்தில் அருள்பாலித்தார்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவம் 4-ம் நாளான இன்று அம்பாள் அனுமந்த வாகனத்தில் அருள்பாலித்தார்
திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான இன்று அம்பாள் அனுமந்த வாகனத்தில் அருள்பாலித்தார்.
கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான இன்று மாலை பால், தயிர், நெய் கொண்டு, மஞ்சள் கொண்டு அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள வாகன மண்டபத்தில் ஜீயர்கள் திவ்ய பிரபந்தங்கள் பாட, அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க அனுமந்த வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி காட்சியளித்தார்.
Comments