100 அடி உயரத்தில் இருந்து பல புதிய கார்களை விழச் செய்து, பாதுகாப்பை பரிசோதிக்கும் வால்வோ நிறுவனம்
100 அடி உயரத்தில் இருந்து பல புதிய கார்களை விழச் செய்து, பாதுகாப்பை பரிசோதிக்கும் வால்வோ நிறுவனம்
வால்வோ நிறுவனம், 100 அடி உயரத்தில் இருந்து பல புதிய கார்களை விழச் செய்து, அவற்றின் பாதுகாப்பு அம்சங்களை பரிசோதித்து வருகிறது.
பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார்களை தயாரிப்பதற்கு பேர் பெற்ற வால்வோ நிறுவனம், விபத்து ஏற்பட்ட உடன் மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகளின் தரத்தை, மேலும் மேம்படுத்த முடிவு செய்தது.
இதையடுத்து, விபத்து ஏற்பட்ட வாகனத்தில் சிக்கியவரை, உடனடியாக வெளியேற்றுவதற்கு மீட்பு குழுவினருக்கு தத்ரூபமாக பயிற்சி அளிப்பதற்காக, வால்வோ நிறுவனம் இந்த முயற்சியில் களமிறங்கியுள்ளது.
Comments