வீடு முன்பு திரண்ட ரசிகர்களுக்கு ரஜினி கையசைத்து வாழ்த்து

0 4843

சென்னை போயஸ் தோட்டத்தில் வீடு முன்பு திரண்ட ரசிகர்களின் உற்சாக முழக்கத்திற்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் கையசைத்து வாழ்த்து தெரிவித்தார்.

ஆண்டுதோறும் தீபாவளியன்று வாழ்த்து சொல்வதற்காகவும் வாழ்த்துப் பெறுவதற்காகவும் ரஜினி ரசிகர்கள், அவரது வீட்டு முன்பு திரள்வது வழக்கம். கொரோனா காரணமாக பல மாதங்களாக ரஜினிகாந்த் பொது இடங்களுக்கு வருவதைத் தவிர்த்து வந்த நிலையில், தீபாவளியன்று அவரைப் பார்க்கும் ஆவலோடு ரசிகர்கள் பலர் திரண்டிருந்தனர்.

வீட்டுக்குள் இருந்தபடியே கையசைத்து ரசிகர்களுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தார். ரசிகர்களும் பதிலுக்கு வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments