இதுவே தனது கடைசி தேர்தல் என கூறவே இல்லை -பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

0 1407
இதுவே தனது கடைசி தேர்தல் என கூறவே இல்லை -பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

இந்த தேர்தலே தனது கடைசி தேர்தல் என்று தான் ஒருபோதும் சொல்லவில்லை என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இறுதி நாள் பிரசாரத்தின்போது இதுவே தன்னுடைய கடைசி தேர்தலாக இருக்கும் என நிதிஷ்குமார் உருக்கத்துடன் பேசியிருந்தார்.

தற்போது தேர்தல் முடிவுகளும் வெளியாகி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், அரசியலில் இருந்து ஓய்வு பெறும் அர்த்தத்தில் அப்போது தாம் பேசவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், இறுதி நாள் பிரசாரத்தை குறிக்கும் விதமாக தாம் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments