இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்றைய வணிகம் வீழ்ச்சி

0 1312

ந்தியப் பங்குச்சந்தைகளில் இன்றைய வணிகம் சரிவுடன் தொடங்கியுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் முழு வேகம் பெற்றதால் இந்தியப் பங்குச்சந்தைகள் மீட்சிகண்டு பழைய நிலையை அடைந்ததுடன் நவம்பர் 11 அன்று வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டன.

இந்நிலையில் இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீட்டென் சென்செக்ஸ் 276 புள்ளிகள் சரிந்து 43 ஆயிரத்து 81 ஆக இருந்தது.

தேசியப் பங்குச் சந்தை பங்குவிலைக் குறியீட்டெண் நிப்டி 79 புள்ளிகள் சரிந்து 12 ஆயிரத்து 612 ஆக இருந்தது. வங்கித்தொழிலில் உள்ள சில நிறுவனங்களின் பங்கு விலை 3 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments