சேலம், நாமக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

0 12356

சேலம், நாமக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வடகிழக்குப் பருவமழை காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, பரவலாக, மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சேலம், நாமக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை தீபாவளியன்று திருநெல்வேலி, இராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, ஓரிரு இடங்களில், கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments