எல்லைப் பகுதியில் ஊடுருவலைத் தடுப்பதும், பாதுகாப்பை மேம்படுத்துவதுமே அரசின் நோக்கம்- அமைச்சர் அமித் ஷா

0 638
எல்லைப் பகுதியில் ஊடுருவலைத் தடுப்பதும், பாதுகாப்பை மேம்படுத்துவதுமே அரசின் நோக்கம்- அமைச்சர் அமித் ஷா

எல்லையில் சட்டவிரோத குடியேற்றங்களை தடுப்பதும், தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்துவதுமே அரசின் இலக்கு என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் புஜ் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லைப் பகுதியில் உள்ள ஊர்களில் மின்சாரம், குடிநீர், சாலை உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த உட்கட்டமைப்புப் பணிகள் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டதல்ல என்றும், எல்லையில் ஊடுருவலைத் தடுப்பதையும், தேசியப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது என்றும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments