ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து அமெரிக்காவிலும், வேகமெடுத்துள்ள கொரோனா தொற்று பரவல்

0 899
ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து அமெரிக்காவிலும், வேகமெடுத்துள்ள கொரோனா தொற்று பரவல்

ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து அமெரிக்காவிலும், கொரோனா தொற்று பரவலின் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 8 லட்சத்தை கடந்துள்ளது.

ஆயிரத்து 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க, பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 48 ஆயிரத்தை கடந்துள்ளது.

அமெரிக்கர்கள் மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளி போன்றவற்றை தீவிரமாக பின்பற்றுவதன் மூலம், நோய்த்தொற்று பரவலை குறைக்க முடியும் என, தொற்று நோய் நிபுணர் ஆண்டனி பாசி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments