கணவன், மாமனார், மாமியார்... துப்பாக்கிக்கு இரையாக்கிய பெண்; சொத்துக்காக அரங்கேறிய கொடூரம்

0 3518
கணவன், மாமனார், மாமியார்... துப்பாக்கிக்கு இரையாக்கிய பெண்; சொத்துக்காக அரங்கேறிய கொடூரம்

சென்னையில் பட்டப்பகலில் ஒரே குடும்பத்தில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில்   3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம், பிரோகி ஜவான் பகுதியைச் சேர்ந்த தலில்சந்த், செளகார்பேட்டையில், பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். விநாயகர் மேஸ்திரி தெருவில், மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல் உள்ளிட்டோருடன் வசித்து வந்துள்ளார். கடந்த புதன்கிழமை மாலை 4 மணியளவில் மூவரும் அவர்களது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரித்ததில் ஷீத்தலின் மனைவி ஜெயமாலா கொலையில் ஈடுபட்டது தெரியவந்துது. ஷீத்தல் - ஜெயமாலா தம்பதிக்கு 11 வயதிலும் 13 வயதிலும் இரண்டு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

சம்பவத்தன்று புனேவில் இருந்து வந்த ஜெயமாலா, தனது இரண்டு மகள்களின் எதிர்காலம் கருதி சொத்துக்களை எழுதி வைக்கக் கேட்டு கணவன் குடும்பத்தாருடன் வாக்குவாதம் செய்ததாக போலீசார் கூறுகின்றனர். ஜெயமாலாவுடன் புனேயில் இருந்து வந்த அவரது உறவினர்கள் 5 பேர் இருந்துள்ளனர். சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் செல்போன் சிக்னலைக் கொண்டும் கொலையாளிகள் மஹாராஷ்டிரா தப்பிச் சென்றதை அறிந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். ஜோலாப்பூரில் வைத்து ஜெயமாலாவின் அண்ணன் கைலாஷ் உறவினர்கள் ரபீந்திரநாத் தாகூர், விஜய் என 3 பேரை கைது செய்துள்ளனர் போலீசார்,.

நாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு 3 கொலைகளும் அரங்கேற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மூவரின் கைகளையும் பின்பக்கமாக உறவினர்கள் பிடித்துக் கொள்ள, ஜெயமாலாதான் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார் என்கின்றனர் போலீசார். கைதான மூவரையும் சென்னை கொண்டுவர போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனிடையே கொலையானவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments