தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

0 1080

பிளஸ் ஒன் பொதுத் தேர்வில் 91 புள்ளி 3 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

தமிழகத்தில் முதன்முறையாக, பிளஸ் 1 வகுப்புக்கு 2017-18ஆம் கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. மார்ச் 7ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 16ஆம் தேதி முடிவுற்ற தேர்வுகளை 8 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர்.

இவர்களுக்கான தேர்வு முடிவுகள், இன்று காலை 9 மணியளவில் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய 3 இணையதளங்களில் வெளியிடப்பட்டது. மேலும், மாணவ, மாணவிகள் கொடுத்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக, மதிப்பெண் அனுப்பப்பட்டது. இதன்படி, தேர்வு எழுதியவர்களில் 91 புள்ளி 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94 புள்ளி 6 சதவீதம் பேரும், மாணவர்கள் 87.4 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் டூ வகுப்புகளைப் போன்று, பிளஸ் ஒன் தேர்விலும் மாணவர்களை விட, மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 600 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில், 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். இந்நிலையில், பிளஸ் ஒன் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு, ஜூலை 5ஆம் தேதி மறுத்தேர்வுகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments