லடாக் எல்லைப் பகுதியில் இருந்து படைகளை விலக்கத் தொடங்கிய சீனா..!

0 15632
லடாக் எல்லைப் பகுதியில் இருந்து படைகளை விலக்கத் தொடங்கிய சீனா..!

ராணுவ அதிகாரிகள் இடையிலான எட்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து சீனா லடாக் எல்லையில் இருந்து தனது படைகளை விலக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஒருவாரத்தில் 30 சதவீதப் படைகள் குறைக்கப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக் அசல் எல்லைக் கோடு அருகே கடந்த ஏப்ரல் மாதம் முதல் சீனப்படைகள் முன்னேறி முக்கிய மலைச்சிகரங்களை ஆக்ரமித்துள்ளன. சுமார் 60 ஆயிரம் வீரர்கள், பீரங்கிகள், விமானங்கள் போன்ற அனைத்து வகையான போர் முன்னேற்பாடுகளுடனும் சீனா இந்தப் பிரதேசத்தை ஆக்ரமிப்பு செய்துள்ளது. பதிலுக்கு இந்தியப் படைகளும் நேருக்கு நேராக சீனாவை களத்தில் சந்தித்து வருகின்றன.

சீனாவின் படைக்குவிப்பால் எல்லையில் கடந்த சில மாதங்களாக பதற்றம் காணப்படுகிறது. படைகளை முழுவதும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று சீனாவுக்கு இந்தியா உறுதியுடன் வலியுறுத்தி வருகிறது. எட்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்றதையடுத்து படைகளை விலக்கிக் கொள்ள சீனா ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எல்லைப் பகுதியில் இருநாட்டு ராணுவத்தினரும் ரோந்து மேற்கொள்வதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று பிங்கர் 8 மலைச்சிகரத்தில் இருந்து சீனப்படைகள் பீரங்கிகள் போன்றவை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பகுதி இந்தியாவுக்கு முக்கியமனானது. இங்கிருந்து கழுகுப் பார்வையுடன் சீனாவின் எல்லையை இணைக்கும் சாலைகளை இந்திய ராணுவத்தால் கண்காணிக்க முடியும்.

சீனா தனது படைகளை விலக்கிக் கொள்ள இந்தியா வலியுறுத்தி வரும் நிலையில், விரைவில் இருநாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே ஒன்பதாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments