ஷாங்காய் மாநாடு : இந்தியாவுடனான பிரச்சனைகளை எழுப்ப முயன்ற பாகிஸ்தானுக்கு ரஷ்யா கடும் கண்டனம்

இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தானுக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பை அமைப்புகளின் நாடுகள் கூட்டத்தில் இந்தியாவுடனான பிரச்சனைகளை எழுப்ப பாகிஸ்தான் முயன்றது.
இதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் மாநாட்டை நடத்திய ரஷ்யாவும் இப்போது பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் பேசிய ரஷ்ய துணைத்தூதர் ரோமன் பாபுஸ்கின், உறுப்பு நாடுகள் தங்களுக்குள்ளான இரு தரப்பு விவாகரங்களை மாநாட்டில் எழுப்ப கூடாது என்பது அடிப்படை விதி என்றார்.
இந்த விதியை மீற முயன்ற பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்தியா- பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு விவகாரத்தில் ரஷ்யா ஒருபோதும் தலையிடாது என்று அவர் தெரிவித்தார்.
Comments