ஆபாச விளம்பரங்களுக்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை

0 1376

பாசத்தை துண்டும் வகையிலான விளம்பரங்களை ஒளிபரப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. 

இது தொடர்பான பொதுநல மனுவில், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள் ஆபாசமாகவும், வளர் இளம் பருவத்தினரை தூண்டும் விதமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

திரைப்படங்களை போல் விளம்பரங்களையும் தணிக்கைக்கு உட்படுத்த சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் மனுதாரர் கேட்டுக்கொண்டிருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு, ஆபாசமாக உள்ள கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சனைகளுக்கான மருந்துகள், உள்ளாடைகள், வாசனை திரவியங்கள், சோப்புகள், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றுக்கான விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து, வழக்கு குறித்து மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments