தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து இன்று மட்டும் 1,705 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

0 823
தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து இன்று மட்டும் 1,705 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல இன்று மட்டும் 1,705 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக தமிழகம் முழுவதும் 14 ஆயிரத்து 757 பேருந்துகள் இயக்கப்படுகிறது. கொரோனா சூழல் காரணமாக, பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்தோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 2000 பேருந்துகளுடன் கூடுதலாக இன்று 1705 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

நாளை அன்று 1580 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. நேற்று மட்டும் சிறப்பு பேருந்துகளில் 1,16,031 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும் இதுவரை 84000 பயணிகள் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments