சில மணி நேரங்களாக இயங்காத யூ ட்யூப் தளம்

0 2682
சில மணி நேரங்களாக இயங்காத யூ ட்யூப் தளம்

சமூக வலைதளமான யூ ட்யூப் தளம் இன்று காலையில் இயங்காததால் பயனாளர்கள் அவதிக்குள்ளாகினர். இந்தியா மட்டுமின்றி சர்வதே அளவில் இந்தப் பிரச்னை நீடிப்பதாக, யூ ட்யூப் நிறுவனம் தெரிவித்தது.

மேலும், தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக வல்லுநர் குழு ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் இயல்பு நிலை திரும்பும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மூன்று மணி நேர இடைவெளிக்குப் பிறகு காலை 7 மணியளவில் படிப்படியாக  யூ ட்யூப் தளம் செயல்பட தொடங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments