ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகை - தெற்கு ரயில்வே அறிவிப்பு

ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகை - தெற்கு ரயில்வே அறிவிப்பு
ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ போன்ற சிறப்பு ரயில்களின் டிக்கெட் விலையில், தெற்கு ரயில்வே சலுகைகளை அறிவித்துள்ளது.
இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், குறிப்பிட்ட ரயில்களில் 60 சதவிகித இருக்கைகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டு இருந்தால் 20 சதவிகித கட்டண தள்ளுபடியும், 70 முதல் 80 சதவிகித டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டு இருந்தால் 10 சதவிகித கட்டண தள்ளுபடியும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சலுகை நவம்பர் 15 முதல் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments