வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்ததே பீகார் தேர்தல் வெற்றியின் ரகசியம் - பிரதமர் மோடி

0 2497
வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்ததே பீகார் தேர்தல் வெற்றியின் ரகசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்ததே பீகார் தேர்தல் வெற்றியின் ரகசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பாஜ.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் வெற்றி விழா கூட்டத்தில் பேசிய அவர், நாட்டின் பல மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். பீகார் மாநிலத்தில் இந்த முறை அமைதியாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் வளர்ச்சிக்கு உண்மையாக பாடுபடுவோருக்கே மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்பதை பீகார் தேர்தல் நிரூபித்து உள்ளதாக அவர் கூறினார். பரம்பரை அரசியலால் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்பதை இளைஞர்கள் புரிந்து கொண்டதாக கூறிய அவர், தேசிய கட்சி ஒன்று அத்தகைய வலையில் சிக்கி உள்ளது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments